சல்லி
இலங்கை திருநாட்டில் கிழக்கு மாகணத்தில், திருகோணமலை மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமமான சல்லி எமது ஊராகும்.இது இரண்டு பக்கம் கடலாலும், ஒரு பக்கம் ஆறாலும் , மறுபக்கம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. சல்லி-இல் இலங்கையின் புகழ் மற்றும் சக்தி வாய்ந்த இந்து சமய கடவுளின் திருக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. அது எமது கிராமத்தில் அமைந்திருப்பதால் சல்லி முத்துமாரியம்மன் என்ற பெயரோடு கிராமத்திற்கு அடையாளமாக விளங்கி வருகிறது. எமது கிராமம் கடற் தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளது. எமது மக்கள் இந்து சமயத்தை பின்பற்றுபவர்கள். அபிவிருத்தி காரணிகளாக எமது கிராமத்தில் பாடசாலை, நூலகம், மருத்துவமனை மற்றும் மாலைநேர வகுப்புக்கள், கணணி நிலையங்கள் போன்றவை செயல்பட்டு வருகின்றது. இன்னும் குறுகிய காலங்களில் எமது கிராமமானது அதிக அளவான பட்டதாரிகளையும், உத்தியோகத்தர்களையும் கொண்டதாக மாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.