மகுட வாசகம்: கல்வி, ஒழுக்கம், உயர்வு தொலைநோக்கு : நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய தேர்ச்சிப் பொருந்திய தரமான கல்விச்சமூகம் பணிக்கூற்று : வினைத்திறனும், விளைதிறனும் மிக்க கல்விச் செயற்பாட்டின்மூலம் செயல் துடிப்புள்ள மாணவரை அர்ப்பணிப்புடன் உருவாக்குதல்

வரலாறு


பாடசாலை வரலாறு;

இலங்கை திருநாட்டின் கிழக்கு மாகணத்தில் கடற்கரையோர கிராமமான சல்லி என்பதே எமது கிராமமாகும். எமது கிராமத்தில் பாடசாலை என்பது எட்டாக்கனியாகவே முதலில் இருந்து வந்தது. பின்னர் இலங்கை அரசின் ஆதரவுடன் எமது கிராமத்தில் பாடசாலை துவங்க 1949-ல்  அனுமதி கிடைத்தது.   இருப்பினும் பாடசாலை துவங்க ஏதுவான இடம் கிடைக்கவில்லை. பின்னர் எமது  கிராமத்தில்  வசிக்கும் வடிவேல் முத்து என்பவர் தனது  காணியினை தற்காலிகமாக  பாடசாலைக்கென வழங்கினார். முதலில் சல்லி அரசினர் பாடசாலை என்ற பெயரில் 1949-ம் ஆண்டு 7-ம் மாதம் 1-ம் திகதி ஆரம்பமானது. 60 அடி கட்டிடம் ஒன்று மண் சுவற்றால் எழுப்பப்பட்டு 42 மாணவர்களுடன் பாடசாலை ஆரம்பமானது.இப்படசலையின் கட்டிடமானது கிராம மக்களிடம் ரூபாய் 10 வீதம் நன்கொடையாக பெறப்பட்டு கட்டப்பட்டது. இப்பாடசாலையின் முதல் அதிபர் திரு. சபாபதிப்பிள்ளை  செல்வநாயகம் ஆவார். இவரது சேவை தொடர்பாக அறிவதற்கு எவிதமான ஆதாரமும் கிடைக்கபெறவில்லை. ஆயினும் தனி ஒரு நபராக இருந்து வேறு ஆசிரியர்கள் அல்லாமல் இப்பாடசாலைக்கு சேவையாற்றி பக்கபலமாக இருந்துள்ளார். இவரைத் தொடர்ந்து திரு. சௌந்தரராஜன் திரு. செல்லத்துரை திரு. சின்னதுரை  ஆகியோரும் அதிபர்களாக சேவையாற்றி உள்ளனர் ஆனால் அவர்களது சேவைக்காலம் ஆண்டு ரீதியாக அறிய முடியாமல் உள்ளது. பின்னர் 1959-ல் பாடசாலைக்கென நிரந்தரமான ஒரு காணி தேவை என உணரப்பட்டது. அக்காணியினை  சல்லி கிராம வாழ் மக்களில் ஒருவரான திரு. கார்த்திகேசு ரத்னசபாபதிப்பிள்ளை என்பவரால் நன்கொடையாக வழங்கப்பட்டது. பின்னர் அரச உதவியுடன் பாடசாலை திரு. சின்னதம்பி என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. எமது பாடசாலையானது இலங்கையில் உள்ள பாரம்பரியமிக்க பாடசாலைகளில் ஒன்றாகவும் பழமைமிக்க பாடசாலையாகவும் திகழ்கிறது.